மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்
இலங்கையில் நடைபெற்று வரும் 13வது மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று வரும் இந்திய மகளிர் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அபராதம் விதித்துள்ளது.
கடந்த 12ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. அந்தப் போட்டியின் போது, இந்திய அணி பந்துவீச்சில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட தாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஐசிசி விதிகளின்படி ஒவ்வொரு வீராங்கனைக்கும் போட்டி கட்டணத்தின் 5 சதவீதம் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்க தவறியதற்காக இந்த தண்டனை அறிவிக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.