மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பின் போது, தனது பிரசாரப் பயணங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அவர் நிதியமைச்சரிடம் வழங்கினார்.
இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” என்ற யாத்திரையின் போது, நிதி அமைச்சகத்துடன் தொடர்புடைய கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவற்றை உரிய முறையில் மத்திய நிதியமைச்சரிடம் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் உடனிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.