மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட ரன்வீர் – தீபிகா தம்பதியர்!
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியரான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தங்கள் மகள் துவாவின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்தப் படம் இணையத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி, ரன்வீர் – தீபிகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தங்கள் மகளுக்கு “துவா படுகோன் சிங்” என பெயரிட்டதாக இருவரும் அறிவித்தனர்.
இப்போது, இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை ரன்வீர் மற்றும் தீபிகா தம்பதியர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த படங்களில் தங்கள் மகள் துவாவும் இணைந்திருந்தார். துவாவின் முகத்தை பார்த்து, “அம்மா தீபிகாவை போலவே இருக்கிறார்” என ரசிகர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இடையே காதல் மலர்ந்தது 2013-ஆம் ஆண்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ‘கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில். இருவரும் நீண்டகால உறவுக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.