ஆஸ்திரிய பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை அறிவிப்பு
ஆஸ்திரிய நாட்டில் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு அரசு தடை விதித்துள்ளது.
14 வயதிற்குள் உள்ள முஸ்லிம் சிறுமிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற சட்ட முன்மொழிவை அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்து நிறைவேற்றியுள்ளது.
இந்த புதிய சட்டம், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை மீறினால், சம்பந்தப்பட்ட மாணவியரின் பெற்றோருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 85 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், பெண்கள் தங்களது உடலை மூடிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவது ஒரு மத மரபல்ல; அது அடக்குமுறையின் வெளிப்பாடு என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.