மெரினா அருகே போராட்டம்: தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கைது
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் போலீசாரால் கட்டாயமாக பிடித்து அழைத்து செல்லப்பட்டு, இரவு முழுவதும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தூய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும், மேலும் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் மெரினா பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபங்களில் தடுத்து வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய தூய்மை பணியாளர்கள், தங்களை அடைத்துக் வைத்த இடங்களில் காவல்துறையினர் மின்விசிறிகளை நிறுத்தியதாகவும், இதனால் கடும் வெப்பம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தனியார் நிறுவனம் தங்களை பணியிலிருந்து நீக்கியதாகவும், அதற்கு எதிராக மனு அளிக்க முயன்றால்கூட கைது செய்யப்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் வேதனையுடன் கூறினர்.