திரைப்படப் பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்த உயர் நீதிமன்ற நீதிபதி
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திரைப்படப் பாடல்களைப் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட நீதிபதிகள் சுரேஷ்குமார், எம்.எஸ். ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மேடையில் திரைப்படப் பாடல்களை இசைத்து பாடினார். அவரது பாடலைக் கேட்ட நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் உற்சாகத்துடன் பாராட்டுத் தெரிவித்தனர்.