கோவை: தைலமர தோப்பில் தங்கிய காட்டு யானைகள் – பொதுமக்களிடையே பதற்றம்
கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே அமைந்துள்ள தைலமர தோப்பில் காட்டு யானைகள் தங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காக்கா பாளையம் சுற்றுவட்டாரத்தில் அலைந்த மூன்று காட்டு யானைகள், அப்பகுதியில் உள்ள தைலமர தோப்புக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.
யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வருவதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், யானைகள் மனித வசிப்பிடங்களுக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.