பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி!
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரதி பறை பண்பாட்டு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர். எந். ரவி, பறையைத் தானே இசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தப் பண்பாட்டு மையம், புகழ்பெற்ற பறை கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான வேலு ஆசான் தலைமையில் நிறுவப்பட்டது. இதன் திறப்பு நிகழ்வை ஆளுநர் ரவி மரியாதையாக மேற்கொண்டார்.
விழா தளத்திற்கு வந்த ஆளுநரை 100-க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் உற்சாகமான பறை முழக்கத்துடன் வரவேற்றனர்.
அதன் பின்னர், வேலு ஆசான் வழங்கிய பறையைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், தாமும் உற்சாகமாக பறை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.