திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்திருப்பதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் சிங் தாக்கூர் குற்றம் முன்வைத்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் நடைபெற்ற விவாதத்தின் போது அவர் பேசியதாக கூறப்படுகிறது. தனது உரையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியுள்ளதாகவும், இதுவே நீதிமன்ற அவமதிப்பு எனவும் தாக்கூர் கூறினார்.
மேலும், தமிழக அரசு சனாதன தர்மத்திற்கு எதிராக செயற்படுகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவரது இந்தக் கருத்துகளுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது காரணமாக அவைச் செயல்பாடுகள் தற்காலிகமாக சீர்குலைந்தன.