புதிய தொழிலாளர் சட்டங்கள் : தொழிலாளர்களுக்கு உண்மையான நன்மைகள்!
மத்திய அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழில்துறை வட்டாரங்களில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளன. தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இயற்றப்பட்ட இந்தச் சட்டங்கள் எவ்வாறு அவர்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றி, மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் குறியீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே ஆண்டில் பணிபுரிந்தாலே கிராஜுவிட்டி பெறும் உரிமை, அதிக நேர பணிக்கான இரட்டிப்பு சம்பளம், பெண்களுக்கும் இரவு வேளையில் வேலை செய்ய அனுமதி உள்ளிட்ட பல சலுகைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களின் நலனுக்காகவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது.
புதிய சட்டங்கள் தொழில்முனைவோரிடமும் கணிசமான வரவேற்பைப் பெற்றுள்ளன, ஏனெனில் இது பணிமுறையில் தெளிவும், ஒழுங்கும் உருவாக்குகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்களின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த மாற்றம் தொழிலாளர்களுக்கு மட்டுமே நன்மை உண்டாக்கும் எனவும், இதனால் தொழிலாளர்களுக்கு எந்தவிதத் துரதிருஷ்டமும் ஏற்படாது எனவும் தொழிலாளர் சட்ட நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
அனைத்து ஊழியர்களுக்கும் பணி நியமன ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும், நிரந்தர பணியாளர்களைப் போல ஒப்பந்த ஊழியர்களுக்கும் விடுமுறை உரிமை கிடைக்கும், 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருடாந்திர இலவச மருத்துவ பரிசோதனை, வருங்கால வைப்பு நிதி மற்றும் காப்பீடு போன்ற பல நன்மைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய தொழிலாளர் குறியீடுகள் குறித்துப் பரப்பப்படும் தவறான புரளிகளை ஒதுக்கிவிட்டு, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்தச் சட்டங்கள் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியவை என்று பலர் கருதுகின்றனர்.