ஒரே நாளில் தங்க விலையில் திடீர் ஏற்றம் – சவரனுக்கு ரூ.2,560 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளிலேயே சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்ததால் நகை வாங்கும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காலை நேரத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000 ஆக இருந்தது.
அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகியது.
ஆனால் மாலை நேரத்தில் மீண்டும் விலை ஏறி, சவரனுக்கு மேலும் ரூ.960 அதிகரித்து ரூ.98,960 ஆக உயர்ந்தது.
கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.12,370க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வெள்ளியின் விலையும் உயர்வு கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.216 ஆகவும், கிலோவிற்கு ரூ.1,000 ஏறி ரூ.2,16,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.