திருப்பரங்குன்றம் விவகாரத்தில் — இந்து முன்னணி அமைப்பு நடத்தும் ஆன்லைன் கருத்துக்கணிப்பு
திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான நீதிமன்ற உத்தரவு குறித்து பொதுமக்களின் கருத்தை அறிய, இந்து முன்னணி அமைப்பு ஆன்லைன் வழியாக கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
கார்த்திகை தீப விழா நாளில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதி மன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.
இதையடுத்து, “நீதிமன்றத்தின் உத்தரவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லை?” என்ற கேள்வியை மையமாக கொண்டு இந்து முன்னணி அமைப்பு கருத்து கணிப்பு நடத்தியுள்ளது.
இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
‘indhumunnani.org’ என்ற இணைய தளத்தின் மூலம் மேலும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பகிரலாம்.