நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் பலி, 14 பேர் காயம்
மகாராஷ்டிரா மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள், ஒரு ஆண் மற்றும் 6 வயது சிறுமி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
வாஷி பகுதியில் அமைந்துள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது மாடியில் நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பற்றியது. பின்னர் தீ 11 மற்றும் 12-வது மாடிகளுக்கும் வேகமாக பரவியது. தகவல் அறிந்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தினர். தீ அதிகாலை 4 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்; காயமடைந்த 14 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடு திரும்பியுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினர்.