“சட்டப்பேரவைத் தேர்தலில் 3வது இடத்துக்கான போட்டி திமுக–தவெக இடையே” – எஸ்.சி. சூர்யா
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது நிலையைப் பெற திமுகவும், தமிழக வெற்றி கழகமும் ஒருவருக்கொருவர் போட்டியிடும் நிலையில் உள்ளனர் என்று பாஜக இளைஞரணி மாநில தலைவர் எஸ்.சி. சூர்யா கூறினார்.
கோவை மாவட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சூர்யா பங்கேற்று புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, வழிகாட்டும் உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர், “தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பெற திமுகவும், தவெகவும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறார்கள்,” என்று தெரிவித்தார்.
அதுடன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாலும், சட்டம்–ஒழுங்கு நிலைமைத் தளர்ந்துள்ளதாகவும் சூர்யா குற்றஞ்சாட்டினார்.