தெற்கு ரயில்வேயில் முன்பதிவு அட்டவணை தானியங்கி வெளியீட்டு செயல்முறை செயல்பாட்டுக்கு வந்தது
பயணிகளின் முன்பதிவு தகவலை தானாக வெளிப்படுத்தும் புதிய முறை தெற்கு ரயில்வேயில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக, ரயில் புறப்படும் நேரத்துக்கு 4 மணி நேரம் முன்பு முன்பதிவு டிக்கெட்டுகளின் நிலை வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து முன்பதிவு அட்டவணையை வெளியிடும் புதிய முறை செயல்படுத்தப்பட்டது.
இப்போது, அந்த முறையே மேலும் மேம்படுத்தப்பட்டு, முழுக்க தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணை வெளியிடப்படும் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட அனைத்து பிரிவுகளிலும் இந்த தானியங்கி அமைப்பு அமலுக்கு வந்துள்ளதாகவும், இது குறிப்பாக காத்திருப்பு நிலையிலுள்ள பயணிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.