நேர்மையான நீதிபதிக்கு எதிராக மனு — திமுக கூட்டணியின் நடவடிக்கை வருத்தகரம்: நயினார் நாகேந்திரன்
நேர்மையாக பணிபுரியும் ஒரு நீதிபதிக்கு எதிராக திமுக கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் மனு தாக்கல் செய்திருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பாரதியார் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
நீதித்துறை மற்றும் நிர்வாக அமைப்பு ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை உருவானால் மாநிலத்திற்கே பல சிக்கல்கள் தோன்றக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
திமுகவினர் தீர்ப்பு தங்களுக்கு ஆதரவு அளித்தால் ஒரு மொழி பேசுகிறார்கள்; அதற்கு விரோதமாக வந்தால் வேறு விதமாக கருத்து தெரிவிக்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்தார்.
நீதித்துறையும், நிர்வாகத் துறையும் மோதும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒரு நீதிபதியை தகுதிநீக்கம் செய்யும் நோக்கில் எம்.பி.க்கள் மனு அளிப்பது நல்ல முன்னுதாரணம் அல்ல என்றும் இது தவறான நடைமுறைக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.