சென்னை பனையூரில் தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைச் சந்திப்பு
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தவெக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை பனையூரில் நடைபெற்றது.
கட்சியின் பனையூர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகத் தலைமை குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் விஜயின் எதிர்கால தேர்தல் பிரசாரத் திட்டங்கள், பூத் குழு அமைப்பு போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.