சபரிமலையில் 22 நாள்களில் 95 பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை பக்தி மையத்தில், கடந்த 22 நாட்களில் மொத்தம் 95 பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன. மண்டல பூஜை காலம் தொடங்கி சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட இந்த பாம்புகள், பின்னர் பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஆழ்காட்டில் விடப்பட்டன. இதற்காக பாம்புகள் பிடிக்கும் பணியில் ஆறு பேர் கொண்ட குழு தனியாக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் பிடிக்கப்பட்ட பெரும்பாலான பாம்புகள் குறைந்த விஷத்தன்மை கொண்டவையாக இருந்தன. அதில் 15 பாம்புகள் மட்டுமே அதிக விஷத்தன்மை உள்ளவைகளாக இருந்ததாக பாம்பு பிடிப்பு குழுத் தலைவர் பைஜூ தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டின் மண்டல சீசனில் 365க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.