வங்கதேசத்தில் சுதந்திரப் போரட்ட வீரரின் மனைவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்!
வங்கதேசத்தில், இந்து சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரும் அவரது மனைவியும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரங்பூர் மாவட்டத்தின் உத்தர் ரஹிமாபூர் பகுதியில் வசித்து வந்த ஜோகேஷ் சந்திரராய் என்ற சுதந்திரப் போராளியும், அவரது மனைவியும் 10ஆம் தேதி முதல் வீட்டின் கதவு திறக்கப்படாததால், அப்பகுதி மக்கள் கவலைப்பட்டனர்.
அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இருவரும் ரத்தத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக தெரிந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக, கொலைக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.