இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராட்டிய ரஷ்ய அதிபர் புதின்!
இந்தியாவின் மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மை, அதே நேரத்தில் நாட்டின் ஒற்றுமையை காக்கும் திறன் பாராட்டத்தக்கது என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்த புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவு, ஒப்பந்தங்கள், விருந்து, பரிசளிப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்தியாவின் சமூக அமைப்பு குறித்து கருத்து தெரிவித்த புதின்,
“சுமார் 140 கோடி மக்களில் 50 முதல் 60 கோடி பேர் மட்டுமே ஹிந்தி பேசுகின்றனர். மற்ற அனைவரும் பல்வேறு மொழிகளில் பேசுகிறார்கள். இத்தகைய பன்முகத்தன்மையிலும் இந்தியா ஒற்றுமையை காக்கிறது என்பது உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்” என்றார்.
இந்தியாவின் பல மொழிகள், பல கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் திறனே அதன் மிகப்பெரிய பலம் என்றும் அவர் பாராட்டினார்.