ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்ததன்படி, மிசாவா பகுதியில் இருந்து சுமார் 73 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டது. கடுமையான அதிர்வால் பல பகுதிகளில் குடியினரும், கடற்கரையோர மக்களும் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வடக்கு பகுதியிற்கான சுனாமி எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
ஹொக்கைடோ தீவின் உரக்வா பகுதியிலிருந்து முட்சு ஒகவாரா வரை சுனாமி அலைகள் எழும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.