டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கான தகுதி போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரக அணி (UAE) தகுதி பெற்றுள்ளது.
ஓமனில் நடைபெற்ற ஆசியா / கிழக்கு ஆசிய பசிபிக் தகுதி சுற்றின் ‘சூப்பர்-6’ ஆட்டத்தில் ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியதன் மூலம் UAE அணி தகுதி பெற்றது. இதனுடன், நேபாளம் மற்றும் ஓமன் அணிகளுக்கு அடுத்ததாக தகுதி பெற்ற மூன்றாவது அணி என UAE இணைந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 20 அணிகள்:
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து, நேபாளம், ஓமன், நமீபியா, ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா.