உரிமை கோரப்படாத ரூ.2,000 கோடி — உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது: பிரதமர் மோடி
நாடு முழுவதும் உரிமை கோரப்படாமல் கிடக்கும் நிதியில் இருந்து ரூ.2,000 கோடிக்கும் அதிகமான தொகை கடந்த இரண்டு மாதங்களில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் ரூ.78,000 கோடி, காப்பீட்டு நிறுவனங்களில் ரூ.14,000 கோடி, மற்றும் பிற நிதி நிறுவனங்களில் ரூ.3,000 கோடி என மொத்தமாக ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி உரிமை கோரப்படாமல் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த பணத்தின் பெரும்பகுதி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குச் சேர்ந்தது என்பதை நினைவூட்டிய பிரதமர், “கடந்த சில மாதங்களில் இந்தப் பணத்தை அடையாளம் கண்டு, உண்மையான உரிமையாளர்களிடம் சேர்க்க அரசு தீவிரமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.