இலங்கை: கனமழை, வெள்ளம்– உயிரிழப்பு 620-ஐ கடந்தது
இலங்கையில் தொடர்ச்சியாக பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 620-ஐ கடந்துள்ளது.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி இலங்கையின் கிழக்குக் கரையை கடந்த டித்வா புயல், சில பகுதிகளில் 500 மில்லிமீட்டருக்கு மேற்பட்ட கனமழையை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக பல மாவட்டங்களில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
உயிரிழப்புகளின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு இது இலங்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவாகக் குறிப்பிடப்படுகிறது.