நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம் – பக்தர்கள் உற்சாக வரவேற்பு
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் அதிகாலை சாமி தரிசனம் செய்தார்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள டி 54 திரைப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்த நிலையில், அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் வழிபாட்டில் தனுஷும் இயக்குநரும் கலந்து கொண்டனர்.
தரிசனத்திற்குப் பிறகு கோயில் நிர்வாகம் இருவருக்கும் பிரசாதங்கள் வழங்கியது. கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள், நடிகர் தனுஷைச் சுற்றி செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆவலுடன் திரண்டனர்.