தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன – ரயில்வே அமைச்சர் தகவல்
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மொத்தம் 77 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கடலூர் எம்.பி விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் பண்ருட்டி உட்பட கூடுதல் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் கோரிக்கையும் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட ரயில் கட்டண சலுகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த அமைச்சர்,
“இந்தியாவில் ரயில் கட்டணங்கள் அண்டை நாடுகளைக் காட்டிலும் மிகவும் குறைவாக வசூலிக்கப்படுகின்றன” என்று கூறினார்.