ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்கா காட்டுத்தீ: ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி கருகல்
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத்தீ பல்வேறு பகுதிகளில் கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டு வருகிறது. தற்போது 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்து, பொதுமக்கள் சுவாச பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீயில் முற்றாக கருகி உயிரிச்சூழலுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் தீ அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.