வாட்டிகனில் பாதுகாக்கப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான கலைப்பொருட்கள் கனடாவுக்கு மீள அனுப்பப்பட்டது
வாட்டிகனில் கடந்த 100 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டிருந்த அரிய பூர்வீக கலைப்பொருட்கள் கனடாவுக்கு அதிகாரப்பூர்வமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஆர்டிக் பிரதேசங்களில் வாழும் இனுயிட் மக்களால் வேட்டையாடப் பயன்படும் வகையில் தோல் மற்றும் மரத்தால் உருவாக்கப்பட்ட சிறிய படகான இனுயிட் கயாக் முக்கியமான பாரம்பரியப் பொருளாகும். இதை திமிங்கலம், சீல் போன்ற கடல் உயிரினங்களை வேட்டையாட பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
1920களில் கத்தோலிக்க மிஷனரிகளின் மூலம், இந்த இனுயிட் கயாக் உள்ளிட்ட பல பூர்வீக கலைப்பொருட்கள் கனடாவிலிருந்து வாட்டிகனுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அவை அங்கு அருங்காட்சியகத் தொகுப்பாக நூற்றாண்டு காலம் பாதுகாக்கப்பட்டிருந்தன.
பூர்வீக மக்களுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் கனடா அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அரிய இனுயிட் கயாக் உட்பட பல பாரம்பரியப் பொருட்கள் இப்போது கனடாவுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கனடாவுக்கு வந்து சேர்ந்த இந்த கலைப்பொருட்களை, அங்குள்ள பழங்குடியினர் பாரம்பரிய சடங்குகளுடன் வரவேற்று, அவற்றின் மீள்புதுவாங்களை சிறப்பு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடினர்.