“இயக்குநராக மட்டும் இருக்க விரும்பவில்லை” — ‘தூம் 4’ படத்திலிருந்து விலகிய அயன் முகர்ஜி
பாலிவுட் இயக்குநர் அயன் முகர்ஜி, வரவிருக்கும் ‘தூம் 4’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
அயன் முகர்ஜி கடைசியாக இயக்கிய ‘வார் 2’ படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அதன் பின்னர் அவர் ‘தூம் 4’-க்கு இணைந்திருந்தார். ஆனால் தற்போது அந்தப் படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயன் தற்போது ‘பிரம்மாஸ்திரா 2’ படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டில் அதன் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதால், அதில் முழு கவனம் செலுத்த விரும்புகிறார் என கூறப்படுகிறது.
மேலும், ‘வார் 2’ மற்றும் ‘தூம் 4’ ஆகிய இரண்டின் கதையும் தன்னுடையது அல்ல என்பதால், வெறும் இயக்குநராக மட்டுமே பணிபுரிய விருப்பமில்லை என தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அயனின் முடிவை தயாரிப்பாளர் குழுவும், நடிகர் ரன்பீர் கபூர் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், புதிய இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.