உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட 10 செய்திகள் – கூகுள் பட்டியல் வெளியீடு
இந்த ஆண்டில் உலக மக்களால் அதிகமாக கூகுளில் தேடப்பட்ட முக்கிய 10 செய்திகளை கூகுள் வெளியிட்டுள்ளது.
பட்டியலில் முதலிடத்தை, டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் கடந்த செப்டம்பரில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி பெற்றுள்ளது.
அடுத்து, இஸ்ரேல்–ஈரான் மோதல், அமெரிக்க அரசு முடக்கம் (Government Shutdown), புதிய போப் தேர்வு, லாஸ் ஏஞ்சல்ஸ் பெரிய தீ விபத்து, ஜமைக்காவை தாக்கிய மெலீசா சூறாவளி உள்ளிட்ட செய்திகள் உலகளவில் அதிகம் தேடப்பட்டுள்ளன.