கர்நாடகாவில் தெருநாயை அடித்துக் கொன்ற இளைஞர்கள் – வீடியோ வைரல்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா அருகே தெருநாயை இளைஞர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தகவலின்படி, அந்தப் பகுதியில் பன்றிக்குட்டிகளை தெருநாய் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சில இளைஞர்கள், பன்றிகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலையை வீசி தெருநாயை பிடித்தனர். பின்னர், மரக்கட்டையால் பலமுறை தாக்கி நாயை கொன்றனர்.
சம்பவம் சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, ஒரு விலங்கு நல ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.