சபரிமலையில் ரோப்–கார் சேவை அமைக்கும் முயற்சி தொடங்கியது!
சபரிமலையில் ரோப் கார் போக்குவரத்து சேவை அமைக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான ஆரம்பப் பணிகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தொடங்கி உள்ளது.
பம்பையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் மலைச்சிகரத்தில் அமைந்துள்ள சபரிமலை சன்னிதானத்திற்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது நீண்ட காலமாக பெரிய சிரமமாக இருந்து வருகிறது.
முன்னொரு காலத்தில் கழுதை மூலம் சுமைகள் எடுத்து செல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது டிராக்டர் உதவியுடன் பொருட்கள் மலைமேல் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானம் வரை ரோப் கார் வசதியை உருவாக்க தீர்மானித்த திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, அதற்கான திட்ட வடிவமைப்பு மற்றும் பல கட்ட தயாரிப்புகளையும் நிறைவு செய்துள்ளது.
வரும் மாதம் நடைபெறவுள்ள மகரஜோதி திருவிழாவின் போது, ரோப்–கார் சேவைக்கான கேபிள்கள் அமைக்கும் பணியின் அடிக்கல் நாட்டப்படும் என தேவஸ்தானம் சார்ந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.