“பாகிஸ்தானும் ஜனநாயகமும் ஒரே பாதையில் செல்ல முடியாது” – இந்திய வெளியுறவு அமைச்சகம்
பாகிஸ்தானும் ஜனநாயகமும் ஒன்றிணைந்து பயணிக்க முடியாது என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானில் நடைபெறும் அனைத்தையும் இந்தியா கவனித்து வருவதாகவும், அந்நாடு ஆப்கானிஸ்தான் மக்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை இந்தியா தீவிரமாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் சுயாட்சி ஆகியவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனாவுடன் இந்தியாவின் உறவு நேர்மறையான திசையில் நகர்ந்து வருவதாகவும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இங்கிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் வரவேற்று, இது உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.