கிளிநொச்சியில் புயலால் சேதமான பாலத்தை சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவம்
இலங்கையின் கிளிநொச்சி அருகே ‘டிட்வா’ புயலால் சேதமடைந்த பரந்தன்–முல்லைத்தீவு பகுதியில் உள்ள பாலத்தை புனரமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பொறியியல் படை ஈடுபட்டுள்ளது.
புயல் தாக்கத்தின் காரணமாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த இந்தப் பாலத்தை சரிசெய்ய, இந்திய ராணுவ பொறியாளர்கள் குழு சிறப்பு உபகரணங்களுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்று பணிகளைத் தொடங்கியுள்ளது.
இந்த பணிக்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தற்காலிக இரும்புப் பாலத்தை பொருத்தும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சில நாள்களுக்குள் பணி முடிவடைந்து, போக்குவரத்து மீண்டும் வழமைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.