பிரிட்டனில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் : இந்தியர்கள் அதிகம்!
இங்கிலாந்தை விட்டு செல்வோரான வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் மிக உயர்ந்த எண்ணிக்கையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேலை வாய்ப்புகளும், கல்வி தொடர்பான காரணங்களும் அதிகமாக இருப்பதால் உலக நாடுகளிலிருந்து பலர் பிரிட்டனை அடைகின்றனர்.
அந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 39% உயர்ந்ததால், பிரிட்டன் குடிமக்கள் வாழ்க்கையில் இடையூறுகள் உருவாகியுள்ளதாக அரசு தெரிவித்தது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அரசு கடும் குடிவரவு மற்றும் விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
இவ்வாறான புதிய விதிமுறைகளின் காரணமாக பிரிட்டனில் குடியேறும் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 7 இலட்சம் பேர் இங்கிலாந்திலிருந்து பிற நாடுகளுக்கு சென்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.