கொடி நாள் நன்கொடை வழங்க அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள்
கொடி நாள் தினத்தை முன்னிட்டு, அனைவரும் மனதார நன்கொடைகளை வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது:
முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நம்மால் செய்யப்படும் ஒவ்வொரு உதவியும் அவர்களின் தியாகத்தையும் சேவையையும் மதிப்பிடும் நடவடிக்கையாக இருக்கும். அவர்களை ஆதரிப்பதன் மூலம், நாட்டு ஒன்றுமைப்பாட்டிற்கான நமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த முடியும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.