தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்
சீனாவின் ஷென்சென் நகரில் ஒரு பெண், தஞ்சாவூரின் பிரசித்தி பெற்ற தலையாட்டிப் பொம்மையைப் போல நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
காவிரி ஆற்றின் களிமண் மூலம் பாரம்பரியமாக வடிவமைக்கப்படும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகள் உலகம் முழுவதும் தனித்துவமான கலைப்பொருளாக மதிக்கப்படுகின்றன. சமீப ஆண்டுகளில் பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ், மரத்தூள், காகிதக்கூழ் போன்ற நவீன பொருட்களாலும் அவை தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஷென்சென் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பாரம்பரிய விழாக்களில் இந்த ‘தலையாட்டுப் பொம்மை’ ஸ்டைல் நடனம் அடிக்கடி அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய பாரம்பரிய கலை வடிவத்தை சீனாவிலும் வரவேற்று நிகழ்த்துவது அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.