இண்டி கூட்டணியில் மனக்கசப்பு – பாஜகவுடன் சேர ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் முயற்சி?
இண்டி கூட்டணியுடன் தொடர்ந்துவரும் அதிருப்தியால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பாஜக தரப்புடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் என்ற தகவல்கள் வெளிப்படுகின்றன.
ஜார்க்கண்டில் தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அமைச்சரவையிலும் இரு கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், இண்டி கூட்டணியிலிருந்து விலகும் முடிவை ஜே.எம்.எம் எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனும், அவரது மனைவி கல்பனாவும் டெல்லியில் பாஜக உயர்நிலை தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினர் என்ற செய்தி பரவியுள்ளது.
மாநிலத்தில் நீடித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க பாஜக கூட்டணியில் சேருவது குறித்து சோரன் ஆலோசித்து வருவதாகவும், நாடு முழுவதும் காங்கிரசின் தாக்கம் குறைந்து வரும் சூழலில் அந்தக் கட்சியை நம்புவது பயனற்றது என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.