போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கோக்கைன் கைப்பற்றி பறிமுதல்
அமெரிக்க கடலோர காவல்படை நடத்திய பெரிய அளவிலான போதைப்பொருள் தடுப்பு சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோக்கைன் சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு பசிபிக் கடல்பாதை வழியாக மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் கோக்கைன் கடத்தி வருவதாக அமெரிக்க கடலோர பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து, கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கண்காணிப்பின் போது, கடத்தல் கும்பல் சென்ற படகை கண்டறிந்த காவல் துறை, எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியது. பின்னர் அந்தக் கப்பலை முற்றுகையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த படகில் இருந்த சுமார் 9,000 கிலோ எடையுடைய மிகவும் ஆபத்தான கோக்கைன் போதைப்பொருளை முழுமையாக கைப்பற்றி பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கும்பல் உறுப்பினர்களையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.