பிரதமர் மோடி – அதிபர் புதினை மையப்படுத்திய கார்ட்டூன் வீடியோ வைரல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குறித்துத் தயாரிக்கப்பட்ட ஒரு கார்ட்டூன் வீடியோ, ஆங்கில செய்தி சேனல் மூலம் வெளியிடப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் அரசு பயணமாக இந்தியா வந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் தூதரக உறவுகள் இன்னும் வலுப்பெற்றுள்ளன.
இந்த சூழலில், ஒரு ஆங்கில செய்தி சேனல், மோடி மற்றும் புதின் இருவரும் பாலிவுட் நட்பு பாடலை பாடிக் கொண்டே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்கிறார்களென காட்டும் நகைச்சுவை கார்ட்டூன் வீடியோவை வெளியிட்டது.
அந்த வீடியோவில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று வலியுறுத்தும் டொனால்ட் ட்ரம்பை சாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த கார்ட்டூன் வீடியோவை ரஷ்ய பரிமாரகம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, வேடிக்கையான மற்றும் படைப்பாற்றலான வடிவமைப்புக்காக ஆங்கில செய்தி சேனலை நகைச்சுவையுடன் பாராட்டியுள்ளது.