விமான சேவை சீர்கேடு — இண்டிகோ விவகாரத்தில் தேவையான நடவடிக்கை எடுப்போம்: மத்திய அமைச்சர்
சமீபத்தில் ஏற்பட்ட இண்டிகோ விமான சேவை பாதிப்புகள் தொடர்பாக தவறாது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவர் பேசியபோது,
விசாரணை அறிக்கையின் முடிவு வெளிவந்த பின்னர், அதனை அடிப்படையாக கொண்டு இண்டிகோ நிறுவனத்துக்கு எதிராகத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
விமான தாமதம் மற்றும் சேவை ரத்தாகுதல் போன்ற பிரச்சினைகள் மெதுவாக சீராகி வருவதாகவும், இண்டிகோவில் ஏற்பட்ட சேவை தடங்கல்கள் புறக்கணிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.