“அகண்டா 2” வெளியீட்டிற்கு தற்காலிக நிறுத்தம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
“அகண்டா – 2” திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை தற்காலிகமாகத் தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
“14 ரீல்ஸ்” நிறுவனத்திடம் பெற்ற 11 கோடி ரூபாய் கடனை, அதனுடன் கூடிய வட்டியையும் திருப்பிச் செலுத்தும் வரை படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டுமென Eros International Media Ltd உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், மனுவினைப் பொருத்தமாகக் கருதி, “அகண்டா 2” வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியுள்ளது.