நிலுவை வழக்குகள் தீர்ப்பதே முதலாவது குறிக்கோள் – தலைமை நீதிபதி சூர்யகாந்த்
நீதிமன்றங்களில் குவிந்திருக்கும் வழக்குகளை விரைவாக குறைப்பதற்கே தாம் முதன்மையான முக்கியத்துவம் அளிப்பேன் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெளிவுபடுத்தினார்.
ஒரு ஆங்கிலச் செய்தி நிறுவனத்தின் கருத்தரங்கில் உரையாற்றிய அவர், உச்சநீதிமன்றம் சாதாரண குடிமக்களுக்கும் சமமாக பயன்படும் தளம் என்று குறிப்பிட்டார்.
தேசிய நீதித்துறையின் அடிப்படை நோக்கம், நிலுவையில் உள்ள வழக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்றும் நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்.