ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் உடைகளில் ஹரே கிருஷ்ணா பஜனை – இணையத்தில் வைரலான வீடியோ
ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்ற சூப்பர் ஹீரோ உடைகள் அணிந்த சிலர், “ஹரே கிருஷ்ணா – ஹரே ராமா” என்ற பக்தி பாடலை பாடும் காட்சி இணையத்தில் பரவலாகக் கவனம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு எந்த நாட்டில் இடம்பெற்றது என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், சமூக வலைத்தளங்களில் அது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு நகரப் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் அருகே கிருஷ்ண பக்தர்கள் பாரம்பரிய பஜனை நடத்திக் கொண்டிருந்த சமயம், ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பேட்மேன் வேடங்களில் மூவர் திடீரென அந்தக் குழுவில் இணைந்தனர்.
அந்த சூப்பர் ஹீரோ வேடதாரிகள் பக்தர்களுடன் சேர்ந்து ராமா–கிருஷ்ணா நாமசங்கீதத்தில் கலந்து கொண்டதை அங்கிருந்த மக்கள் பெரிதும் வரவேற்று கைதட்டினர். பலரும் இக்காட்சியை தங்கள் மொபைலில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்.
தற்போது அந்த வீடியோ பல தளங்களில் வைரலாகி தொடர்ந்து பரவி வருகிறது.