கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா துவக்கம்
கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை கடைஞாயிறு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருநாகேஸ்வரம் கோயில் ராகு பகவானின் பிரசித்தி பெற்ற தலம் ஆகும். இங்கு நடைபெறும் 11 நாள் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக, அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் பவனி வந்து கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
பின்னர் கொடிமரத்திற்கு பால், தயிர் உள்ளிட்ட புனித திரவங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திர ஓதத்துடன், நந்தி உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை தனுசு லக்னத்தில் கொடிமரத்தில் ஏற்றினர்.
பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடக்க நாளை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்