பெல்ஜியத்தில் 15 வயது சிறுவன்—குவாண்டம் இயற்பியலில் PhD சாதனை!
வயது 15-இல் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்று, அறிவியல் துறையின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு அதிவேக திறமைசாலி சிறுவன்.
இன்றைய காலத்தில் பல இளம் மாணவர்கள் சமூக ஊடகங்கள், ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் சூழலில், 15 வயது லாரண்ட் சைமன்ஸ் குவாண்டம் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிறந்த லாரண்ட், 8 வயதிலேயே மேல்நிலைப் பள்ளி கல்வியை முடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். வழக்கமாக 3 ஆண்டுகள் பிடிக்கும் இளங்கலைப் படிப்பை, வெறும் 18 மாதங்களில் சிறப்பு திறமைகளுடன் 11 வயதில் முடித்தார்.
அதோடு, 12 வயதிலேயே குவாண்டம் இயற்பியலில் முதுநிலைப் பட்டமும் கைப்பற்றினார்.
இதன் தொடர்ச்சியாக, 2025ஆம் ஆண்டு 15 வயதில் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி விவரணத்தை வெற்றிகரமாக சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வமாக PhD பட்டம் பெற்றுள்ளார்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து உயர் சம்பள வேலை வாய்ப்புகள், சிறப்பு சலுகைகள் வந்தபோதும் அவற்றை ஏற்காமல், சூப்பர்-மனிதர் திறன்கள் உருவாக்கம் மற்றும் மனித ஆயுட்காலத்தை உயர்த்துதல் போன்ற நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணம் செய்து வருகிறார் லாரண்ட் சைமன்ஸ்.