ஹோண்டுராஸ் முன்னாள் அதிபருக்கு டிரம்ப் மன்னிப்பு – சிறையிலிருந்து விடுதலை!
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஹோண்டுராஸின் முன்னாள் அதிபருக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மன்னிப்பு வழங்கி சிறையிலிருந்து விடுவித்துள்ளார்.
ஹோண்டுராஸ் முன்னாள் தலைவர் ஜுவான் ஆர்லாண்டோ, அமெரிக்காவுக்கு சுமார் 400 டன் கொக்கைன் கடத்த உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, 45 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பட்டிருந்தார்.
இந்த நீண்டகால தண்டனையை ரத்து செய்யும் வகையில், டிரம்ப் தனது அதிபருக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஹோண்டுராஸில் நடைபெற இருக்கும் தேர்தலில், டிரம்ப் ஜுவான் ஆர்லாண்டோவின் கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இதுவே இந்த மன்னிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒருபுறம் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக வெனிசுலாவை கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப், மறுபுறம் ஆர்லாண்டோவுக்கு மட்டும் சலுகை விடுத்தது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.