செயற்கை நுண்ணறிவு தொடர்பாக நடிகை ராஷ்மிகா பகிர்ந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தனது எக்ஸ் பக்கத்தில் ஏஐ பற்றிய விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், செயற்கை நுண்ணறிவு மனித சமூக வளர்ச்சிக்கான ஒரு வலிமையான கருவி என்றாலும், அதை சிலர் பெண்களை அவமதிக்கும் வகையில் தவறாக பயன்படுத்தி வருவது கவலை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் இனி உண்மையை பிரதிபலிக்கும் ஒரு இடம் அல்ல; மனித கற்பனையை எந்த வடிவிலும் உருவாக்கக்கூடிய ஓர் டிஜிட்டல் பலகை ஆக மாறி விட்டது எனவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.
சமீபகாலத்தில், ராஷ்மிகாவை பொருத்தி உருவாக்கப்பட்ட டீப்–பேக் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.