அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாய் புதிய தாழ்வை எட்டியது!
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 90 ரூபாய் 14 காசுகளாகக் குறைந்து மேலும் சரிவு கண்டுள்ளது.
உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா முன்னிலை வகித்தாலும், ரூபாய் விகிதம் நீண்ட நாட்களாக அழுத்தத்திலேயே உள்ளது.
சந்தையில் டாலருக்கான தேவை உயர்வது, ரூபாயின் வலிமையை மீண்டும் பெறுவதில் தடையாக உள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தக ஆரம்பத்தில் ரூபாய் மதிப்பு மேலும் தளர்ந்து 90.14 என்ற புதிய மிகக் குறைந்த நிலையைத் தொட்டுள்ளது.
முதன்முறையாக ரூபாய், டாலருக்கு எதிராக 90 என்ற முக்கிய எல்லையைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா–அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் தாமதமடைதல், சர்வதேச பொருளாதாரத்தில் நிலைதடுமாற்றம் போன்ற காரணிகள் இந்த மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.