பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு!
இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்ப பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா வான்வெளி அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் தவறானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
டிட்வா புயலின் தாக்கத்தால் இலங்கையில் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கான உதவிப் பொருட்களை அனுப்ப இந்தியா வான்வெளி மறுத்துவிட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் விண்ணப்பம் கிடைத்த நான்கு மணி நேரத்துக்குள் மனிதாபிமான பார்வையில் உடனடி அனுமதி வழங்கப்பட்டதாகவும் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
அதே நேரத்தில், வழக்கம்போல பாகிஸ்தான் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றன என்றும் அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.